பொங்கல் தினத்தில் வெளியாகும் படங்கள் எத்தனை?

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' விக்ரமின் ஸ்கெட்ச், அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', பிரபுதேவாவின் 'குலேபகாவலி', சுந்தர் சியின் 'கலகலப்பு 2', சண்முகப்பாண்டியனின் 'மதுர வீரன்', விமலின் 'மன்னர் வகையறா', உதயநிதியின் 'நிமிர்', விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இத்தனை படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கடைசி நேரத்தில் ஒருசில படங்கள் பின்வாங்க வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மற்றும் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களும் பொங்கல் ரேசில் இருந்து விலகிவிட்டது. எனவே இந்த ஆண்டு சூர்யா, விக்ரம், பிரபுதேவா ரசிகர்களுக்கான பொங்கல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கே.எஸ்,.ரவிகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'ஜெய்சிம்ஹா, பவன்கல்யான் நடித்த 'அஞ்ஞாதவாசி ஆகிய தெலுங்கு படங்கள் உள்பட வேறுமொழிகளில் 12 திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மொத்தம் இந்த ஆண்டு 15 திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இதில் எந்த படம் வசூலில் முந்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நாம் செய்யும் முதல் தவறு இதுதான்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: ரஜினியின் அரசியலுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முத்து' படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தை போலவே அவருக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் தோன்றியது.

பிக்பாஸ் ஜூலியின் முதல் பட ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களான ஓவியாவுக்கு பாசிட்டிவ் புகழ் கிடைத்த நிலையில் அதே நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான ஜூலிக்கு நெகட்டிவ் புகழ் கிடைத்தது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே சென்னை பெண்கள் பிரபலமாகி வரும் நிலையில் அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

ஊதிய உயர்வு கேட்காத எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஊதிய உயர்வு மசோதா தாக்கல்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று ஊதிய உயர்வே கேட்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு