நாமினேஷனில் வெறும் 3 போட்டியாளர்கள் மட்டுமே? திட்டம் போட்டு காப்பாற்றப்படுகிறார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் வெறும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே அதாவது விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகியோர்கள் மட்டுமே நாமினேஷனில் உள்ளனர்.
பிக் பாஸ் வரலாற்றில் நாமினேஷனில் வெறும் மூன்று பேர் மட்டுமே இந்த வாரம் இருப்பதை பார்க்கும்போது திட்டம் போட்டு ஒரு சில போட்டியாளர்கள் காப்பாற்றப்படுகிறார்களா? என்ற சந்தேகம் பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்கள் என்று பார்வையாளர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வாரம் மாயா, பூர்ணிமா, தினேஷ், நிக்சன், விஷ்ணு ஆகியவர்கள் வேண்டுமென்றே காப்பாற்றப்பட்டு, விக்ரம், ரவீனா மற்றும் விசித்ரா ஆகிய மூன்று பேர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு நாமினேஷனுக்கு தள்ளி இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஒரு சிலரை வேண்டுமென்றே காப்பாற்றுவதாக பார்வையாளர்கள் சந்தேகிப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி நம்பகத்தன்மையற்று இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் ஸ்கிரிப்ட் என்று சொல்வதை ஒதுக்கிவிட முடியாது என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போகிற போக்கை பார்த்தால் மாயா மற்றும் பூர்ணிமா தான் இறுதிப் போட்டிக்கு நுழைவார்கள் என்று தெரிகிறது என்றும் பார்வையாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com