ரஜினியால் நிரப்ப முடியும் ஒரே வெற்றிடம் இதுதான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

  • IndiaGlitz, [Sunday,May 13 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவினாலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினி விழா ஒன்றில் பேசினார். அதேபோல் சமீபத்தில் பேட்டியளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ரஜினியால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடைத்தை நிரப்ப முடியும் என்று கூறினார்.

ஆனால் இதற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. வானத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலே தான் வெற்றிடம் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அங்கே போனால் வெற்றிடத்தை நிரப்பலாம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ரஜினியை விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களும் அவரை விமர்சித்துள்ளார். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு வழக்கம் போல் ரஜினிகாந்த் பதிலளிக்க போவதில்லை என்பது தெரிந்ததே

 

More News

விரலை காண்பித்தால் தோசை-காபி: கர்நாடக தேர்தலில் வித்தியாசமான முயற்சி

கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்க தனியார் அமைப்புகள் வாக்களித்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன

ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த சென்னை கல்லூரி மாணவி: 

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரும் அவருடைய நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததால்

கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 70% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு

பிரபுதேவாவுடன் திருமணமா? நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம்

பிரபல நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புவதாக சமீபத்தில் நடிகை நிகிஷா பேட்டி ஒன்றில் கூறியிருந்ததாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

அஜித்தை நேரில் பார்த்த மதுரை ரசிகர்களின் நெகிழ்ச்சியான பதிவு

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவரை நேரில் பார்க்க தமிழகத்தின்