அண்டை மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி: தமிழகத்தில் எப்போது?

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை திறக்கப்பட்டு தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடக திரையுலகினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதேபோல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் விரைவில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.