'கோட்' போலவே இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,September 06 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இந்த வாரம் திரையரங்கில் வெளியான நிலையில் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியான நிலையில் இந்த படம் தற்போது அமேசான் மற்றும் ஆகா ஆகிய இரண்டு ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் ’வாஸ்கோடகாமா’ என்ற ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாகி உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் ஐந்து தெலுங்கு திரைப்படங்கள், நான்கு மலையாள படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நெட்பிளிக்ஸில் ‘அடிகோ அமிகோஸ்’ என்ற மலையாள திரைப்படம், அமேசான் ப்ரைமில் ‘ஹவுஸ் கீப்பிங்’ என்ற மலையாள திரைப்படம், மனோரமா மேக்ஸில் ‘பவி கேர்டேக்கர்’ என்ற மலையாள திரைப்படம் மற்றும் அமேசான் ப்ரைமில் ‘பகவான் தசந்தி ராம்ராஜ்யம்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது

அதேபோல் அமேசான் ப்ரைமில் ‘டபுள் ஸ்மார்ட்’ என்ற தெலுங்கு படம், ஆகா ஓடிடியில் ‘சிம்பா’ என்ற தெலுங்கு படம், ஆகா ஓடிடியில் ‘சத்யா’ என்ற தெலுங்கு படம், ஈடிவி வின் ஓடிடியில் ‘நிந்தா’ என்ற தெலுங்கு படம் ஆகியவை வெளியாகியுள்ளது.