உலகிலேயே இந்தியாவில் பரவும் வைரஸ்தான் மிகவும் ஆபத்தானது… WHO கவலை!
- IndiaGlitz, [Wednesday,June 02 2021]
இந்தியாவில் தற்போது பெரும் அளவில் பரவிவரும் பி.1.1617.2 வைரஸின் பரவல் தன்மை அதிகமாக இருக்கிறது என WHO கவலை தெரிவித்து உள்ளது.
பிரேசில் (பி.1), தென்ஆப்பிரிக்கா (பி.1.351), இங்கிலாந்து (பி.1.1.7), அமெரிக்கா (பி.1.617), இந்தியா (பி.1.617) என இதுவரை கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து இருக்கின்றன. இந்த வேரியண்ட்களைக் காட்டிலும் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பி.1.617.2 எனும் உருமாறிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்தான் தற்போது அதிகப் பரவல் தன்மையைக் கொண்டு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
அதோடு இந்தியா மற்றும் இங்கிலாந்தின் கூட்டுக் கலவை இரண்டும் சேர்ந்து தற்போது வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் பி.1.1617.2 எனும் வைரஸ் அதிகப்பரவல் தன்மைக் கொண்டு இருப்பது மிகவும் ஆபத்தானது என WHO எச்சரித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேரியண்ட்களுக்கு WHO புது பெயர்களை சூட்டியது. அதன்படி இந்தியாவில் பரவிவரும் பி.1.617 வைரஸ்- கப்பா, பி.1.617.2 வைரஸ்- டெல்டா எனப் பெயர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர பிரிட்டன்- ஆல்ஃபா, தென்ஆப்பிரிக்கா – பீட்டா, பிரேசில்- காமா, அமெரிக்கா- எப்சிலன் எனப் பெயர் சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.