close
Choose your channels

'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

Friday, October 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது சென்னை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய்-கீர்த்திசுரேஷ் பங்குபெற்ற திருவிழா பாடல் உள்பட ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான தேதி விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அனேகமாக வெளிநாட்டு படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment