ஒரே ஒருவர் மட்டுமே நடித்த படம்.. ஆனாலும் பாட்டு, சண்டை உண்டு.. தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

தமிழ் சினிமாவில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த பார்த்திபன் நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக ’ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜி சிவா நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் இந்த படத்தில் நடித்து ஜி சிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் அவருடைய பிரபலமான டயலாக்கை தலைப்பாக வைத்து உள்ளேன் என்றும் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளேன் என்றும் சிவா தெரிவித்துள்ளார்.

20 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும் ஒரே ஒரு கேரக்டர் நடித்தாலும் இந்த கதையில் ஹீரோயின் உண்டு, சண்டை உண்டு, சோக பாடல் உண்டு, காதல் பாடல் எல்லாம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு கேமராவை மட்டுமே பயன்படுத்தி முழு படத்தையும் எடுத்ததாகவும் ஒரு சமூக கருத்தை சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது என்றும் ஜி சிவா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இதுபோல் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் நான் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

சல்மான்கான் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்.. படப்பிடிப்பு எப்போது?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுத்த படத்தை அஜித் படம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'ஜெயிலர்' ரிலீசுக்கு 2 நாட்கள் முன் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு இரண்டு நாள் முன்பு ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருப்பதாக

ஒரே நாளில் மோதும் விஜய்-சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

விஜய் நடித்து வரும் 'லியோ' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 21' ஆகிய இரண்டு படங்களின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இரு தரப்பு

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா பிரபல நடிகரின் படம்?

வரும் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' கார்த்தி நடித்த 'ஜப்பான்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக

திடீரென சன் டிவி அலுவலகம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன காரணம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகம் சென்றதாக