ஆன்லைனில் திரையரங்க டிக்கெட்டுக்கள்: அரசே விற்பனை செய்ய ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,September 26 2019]

திரையரங்க டிக்கெட்டுகள் தற்போது தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் அரசே ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட்டுக்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது

திரையரங்க ஆன்லைன் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சேவை கட்டணம் பெற்று வருவதை அடுத்து, இந்த சேவை வரியை எத்தனை டிக்கெட் எடுத்தாலும் ஒரு டிக்கெட்டுக்கு உரிய கட்டணம் மட்டுமே பெறவேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது

இந்த நிலையில் தற்போது திரையரங்க டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் அரசே விற்பனை செய்ய செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது

மேலும், திரையரங்குகளில் ஆன்லைன் மூலமாக அரசே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இதுகுறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது