ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மொபைல் போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்த பல திருமணங்கள் நின்றுபோய் கொண்டும், தள்ளிப் போய்க் கொண்டும் இருக்கின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மணமகனுக்கும், லக்னோவை சேர்ந்த மணப்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் திருமணத்தை நடத்த முடியவில்லை. இருப்பினும் இந்த திருமணத்தை ஒத்தி வைக்க விரும்பாத இரு தரப்பினர் ஆன்லைனிலேயே திருமணத்தை முடிக்க முடிவு செய்தனர்.

இதனை அடுத்து மொபைலில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் சந்தித்துக் கொண்டனர். மொபைல் போனில் மணமகள் தோன்றும்போது மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்கு பதிலாக மொபைல் போனுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார். இவர் மொபைல் போனுக்கு தாலி கட்டிய அதே நேரத்தில் மணப்பெண்ணுக்கு ஒரு பெண் தாலி கட்டிக் கட்டினார். இதனை அடுத்து திருமணம் சிறப்பாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்ததும் இரு தரப்பினரும் கூடி மற்ற சடங்குகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கொர்ன்னா வைரஸ் காரணமாக ஆன்லைனில் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடி'யில் ரிலீஸா? 'மாஸ்டர்' படத்தின் முடிவை எடுத்த '83' படக்குழு!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்கு நடிகை வரலட்சுமி கூறிய யோசனை!

நடிகை வரலட்சுமி பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

குளியல் வீடியோவை பார்த்த 600 மில்லியன் பேர்களுக்கு நன்றி கூறிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஒருவரின் குளியல் வீடியோவை 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

கொரோனாவில் மீண்ட பாடகி கனிகாகபூரின் அதிரடி முடிவு!

கொரோனாவை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாலிவுட் பாடகி கனிகாகபூர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

ஈரானில் தொழிற்சாலை எரி சாராயத்தை குடித்த சம்பவம்: இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!!

கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் ஆல்கஹாலை அருந்துவதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என வதந்தி கிளம்பியது.