ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மொபைல் போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்த பல திருமணங்கள் நின்றுபோய் கொண்டும், தள்ளிப் போய்க் கொண்டும் இருக்கின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மணமகனுக்கும், லக்னோவை சேர்ந்த மணப்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் திருமணத்தை நடத்த முடியவில்லை. இருப்பினும் இந்த திருமணத்தை ஒத்தி வைக்க விரும்பாத இரு தரப்பினர் ஆன்லைனிலேயே திருமணத்தை முடிக்க முடிவு செய்தனர்.

இதனை அடுத்து மொபைலில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் சந்தித்துக் கொண்டனர். மொபைல் போனில் மணமகள் தோன்றும்போது மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்கு பதிலாக மொபைல் போனுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார். இவர் மொபைல் போனுக்கு தாலி கட்டிய அதே நேரத்தில் மணப்பெண்ணுக்கு ஒரு பெண் தாலி கட்டிக் கட்டினார். இதனை அடுத்து திருமணம் சிறப்பாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்ததும் இரு தரப்பினரும் கூடி மற்ற சடங்குகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கொர்ன்னா வைரஸ் காரணமாக ஆன்லைனில் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்குமோ என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.