ஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இண்டர்நெட். இந்த இண்டர்நெட் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் மூலம் பெரும்பயன் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் நன்மைகள் கொட்டிக்கிடக்க்கும் இந்த இண்டர்நெட்டில்தான் ஆபத்தும் முறைகேடுகளும் கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில் ஆன்லைனில் மற்றவர்களின் பரிதாபத்தை சந்தித்து 17 நாட்களில் ஒரு பெண் லட்சாதிபதி ஆகியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தன்னுடன் தனது மூன்று குழந்தைகளும் இருப்பதாகவும், குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தனது நிதியுதவி செய்து உதவி செய்யுமாறும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.
இந்த பெண் மீது இரக்கப்பட்டு பலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். இவ்வாறாக 17 நாட்களில் அவருடைய வங்கிக்கணக்கில் $50000 நிதியுதவி குவிந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 லட்சம் ஆகும். இந்த நிலையில் இந்த பெண்ணின் கணவரின் நண்பர்கள் இந்த பதிவை பார்த்து அவருக்கு தகவல் தந்துள்ளனர். உடனே அவருடைய கணவர் காவல்துறையில் அளித்த புகாரில், தன்னுடைய மனைவி தன்னைவிட்டு பிரிந்து வாழ்வது உண்மையாக இருந்தாலும் மூன்று குழந்தைகளும் தன்னுடன் இருப்பதாகவும், தனது மனைவி ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அந்த பெண் தவறான தகவலை கூறி ஆன்லைனில் பணம் பெற்றது உண்மை என தெரிய வந்தவுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments