ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆன விவசாயி: காரணம் வெங்காயம்
- IndiaGlitz, [Sunday,December 15 2019]
வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக வட இந்தியா முதல் தென்னிந்திய வரை கோடிக்கணக்கான மக்கள் படும் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாகி உள்ளார் என்ற அதிசய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வங்கியில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் வெங்காய அறுவடை செய்த நேரத்தில் திடீரென வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 200 வரை கிடைத்ததால் அவருக்கு பணம் கொட்டியது.
இதற்கு முன்னர் அவர் வெங்காய சாகுபடி செய்த போது கிலோ 30 முதல் 40 வரை மட்டுமே விலை கிடைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது. இதனை அடுத்து உடனடியாக சுதாரித்த மல்லிகார்ஜுன் மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் வெங்காயம் பயிர் செய்தார்.
20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை அவர் விற்பனை செய்ததில் ஒரே மாதத்தில் அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் வெங்காயத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெங்காய விலை ஏற்றம் ஒரு விவசாயியை கோடிஸ்வரராக மாற்றியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.