’மாஸ்டர்’ படத்தின் மாஸ் பயணம்: படக்குழுவினர் வெளியிட்ட 4 நிமிட வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதை அடுத்து படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ் ஸ்டில் ஒன்றை வெளியிட்டார் என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் படக்குழுவினர் இன்று ’மாஸ்டர்’ பட அறிவிப்பு முதல் ரிலீசாகி வெற்றி பெற்றது வரையிலான சுவராசியமான காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவில் ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவிப்பு வெளியானது என்பதும் அதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தின் இயக்குனர் என்றும் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இந்த படத்தில் இணைந்து அறிவிப்புகள் அந்த வீடியோவில் உள்ளன.

மேலும் ’மாஸ்டர்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் அதனை அடுத்து சென்னை ஷில்லாங், உள்பட பல பகுதிகளில் நடைபெற்றதையும் அதேபோல் நெய்வேலியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற காட்சியையும் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நெய்வேலியில் ரசிகர்கள் முன் வேன் ஒன்றில் ஏறி விஜய் கையை அசைத்ஹ்ட சம்பவம், அதன்பின் படப்பிடிப்பு நடைபெற்றபோது திடீரென வருமான வரி சோதனை செய்யப்பட்ட காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது, அதன்பின் ’வாத்தி கம்மிங்’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது ஆகிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, அதன் காரணமாக பல மாதங்கள் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது, இதனை அடுத்து ஒரு வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் என்ற நிபந்தனையுடன் வெளியான காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன அதன் பிறகு ’மாஸ்டர்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதும், ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும், மிகப்பெரிய அளவில் செய்த வசூல் சாதனை காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. சுமார் 4 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.