'மாஸ்டர்' திரைப்படத்தின் ஒரு வருட நினைவு நாள்: தமிழ் நடிகரின் டுவீட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்தது. ஆனால் அந்த திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தியேட்டர் திறக்கப்படாததால் இன்னும் ரிலீசாகவில்லை. வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் தீனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவின்போது தீனாவின் பேச்சு கலகலக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீனா தனது சமூக வலைத்தளத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஒரு வருட நினைவு நாளை தான் கொண்டாடுவதாக அறிவித்துள்ளார். இன்றுதான் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நான் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்ட நாள் என்றும், நான் தளபதி கூட ஸ்க்ரீன்ல்ல வரப் போறேன்னு கால் வந்த நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

செல்லக்குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவு செய்த ஜிவி பிரகாஷ்

கோலிவுட் திரையுலகின் நடிகர், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி தனது பள்ளிக்கால தோழியும் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து, தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!!!

பீகார் மாநிலத்தின் முசாப்பூர் பகுதியில் 5 மாதக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

முகமூடியைச் சுத்தப்படுத்துவது எப்படி… சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்!!!

கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூர்யா நம் வீட்டு பிள்ளை: ஓடிடி முடிவுக்கு பாரதிராஜா ஆதரவு: 

நடிகர் சூர்யா, தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்ததை அடுத்து அவரது முடிவுக்கு திரையுலகினர்

தொலைக்காட்சி வழியே கல்வி… கொரோனா காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு!!!

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன.