'மாஸ்டர்' திரைப்படத்தின் ஒரு வருட நினைவு நாள்: தமிழ் நடிகரின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்தது. ஆனால் அந்த திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தியேட்டர் திறக்கப்படாததால் இன்னும் ரிலீசாகவில்லை. வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் தீனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவின்போது தீனாவின் பேச்சு கலகலக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீனா தனது சமூக வலைத்தளத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஒரு வருட நினைவு நாளை தான் கொண்டாடுவதாக அறிவித்துள்ளார். இன்றுதான் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நான் நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்ட நாள் என்றும், நான் தளபதி கூட ஸ்க்ரீன்ல்ல வரப் போறேன்னு கால் வந்த நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
One year of #Master Confirmation day ???????? Naan Thalapathy kooda screen la vara pooraenu call vantha naal ????????????????
— Dheena Actor (@DheenaActor) August 24, 2020
Thanks @actorvijay na & @Dir_Lokesh na
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com