ஒரு வருடத்தை பூர்த்தி செய்த 'லியோ'.. லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான லியோ திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான நிலையில், இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை ஒட்டி, லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்த நிலையில், இரண்டாவது முறையாக லியோ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதனை பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததால் நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆனதை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பல நினைவுகள், பல கற்பித்தங்கள், பல ஆச்சரியமான சம்பவங்கள் ஆகிய காரணங்களால் 'லியோ' எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான ஒரு படமாக இருக்கும். இந்த ஆச்சரியத்தை நிகழ்த்திய விஜய் அண்ணாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வியர்வை, ரத்தத்தை கொடுத்து இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும், இந்த படத்தை ரசித்த ரசிகர்களுக்கும், எப்போதும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. நூலிழையில் தப்பித்த தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் ஆகப்போகும் நிலையில், முதலாவது வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை 6 ராசிகளுக்கான பலன்கள் - ஆதித்ய குருஜி

பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை விரிவாக கூறியுள்ளார்.

பிசினஸ் ஆக மாறிவிட்டதா பிக்பாஸ்? பேக்கேஜ் பேரம் பேசப்படுவதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களில் உண்மையாகவே பார்வையாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

சினேகன் - கன்னிகா வீட்டில் நடந்த முக்கிய விசேஷம்.. க்யூட் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சினேகன்-கன்னிகா வீட்டில் முக்கிய விசேஷம் நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறைவான வாக்கு பெற்ற இருவர்.. இவர்களில் ஒருவர் தான் இந்த வார எலிமினேஷனா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும், நாமினேஷன் ஆனவர்கள் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குறைந்த