144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை: ராணுவத்தை வரவழைக்கவிருப்பதாக முதல்வர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் நேற்றில் இருந்தே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், கொரோனா நோயின் தாக்கத்தை மக்கள் உணரவில்லை என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை என முதல்வர் நாராயணசாமி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை என்றும், புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என்றும், நாளை(25-03-2020) முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#புதுச்சேரி | புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை. #கொரோனாவைரஸ்
— V.Narayanasamy (@VNarayanasami) March 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout