தேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம் அவருக்கு  ஓராண்டு சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்று சென்னை ஆயிரம்விளக்கு  காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்ட நிலையில் வைகோவுக்கு ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் ரூ.10 ஆயிரம் அபராதத்தை உடனடியாக கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு அவசர மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ முடிவு செய்திருந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

சமுத்திரக்கனியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மற்றும் குணசித்திர நடிகர் சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'ஆர்.ஆர்.ஆர்', சில்லுக்கருப்பட்டி', 'அடுத்த சாட்டை', 'வெள்ளைய் யானை', உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு

நீதான் என் காதலி; காதலை ஓப்பனாக சொன்ன கவின்

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருவதை போல் இந்த மூன்றாம் பாகத்திலும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னரே அரையிறுதி அணிகளை கணித்த சச்சின்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர்-தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? பிக்பாஸ் புரமோவில் வனிதா

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை தெலுங்கானா மாநில போலீசார் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர்.