ஒரே மரம், 300 வகை மாம்பழம்...! 80-வயது மேங்கோ மேனின் கதை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில், உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலைநகரான லக்னோவிற்கு அருகில் உள்ள நர்சரியில், மிகப்பெரிய வித்தியாசமான மாம்பழ மரம் ஒன்று உள்ளது. நீங்கள் அம்மரத்தை ஊற்றுபார்த்தீர்கள் என்றால் தெரியும், அம்மரம் எவ்வளவு வித்தியாசமானது என்று தெரியும். மரத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளும் மாறுபட்ட பச்சை வண்ணத்திலும், பிரகாசமான வெளிர் நிறத்திலும் இருக்கும். இதே போல் கிளைகளுக்கு கிளை மாம்பழங்களின் வண்ணத்திலும், அளவிலும் வேறுபாடுகள் இருக்கும். வட்டவடிவம்,ஓவல், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா உள்ளிட்ட வண்ணங்களில் 300 வகையான மாம்பழங்களை இம்மரம் தருகின்றது.
உலகளவில் இந்தியா தான் அதிகமான அளவில் மாம்பழங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்கின்றது. மொத்த மாம்பழ உற்பத்தியில் 40%-ம், 100-க்கும் மேற்பட்ட மாம்பழங்களும் இந்தியாவில் இருந்து உற்பத்தியாகின்றது.
இந்த அதிசிய மரத்தை உருவாக்கியவர் கலிமுல்லா கான், இவருக்கு தற்போதைய வயது 80. இவர் "மேங்கோ மேன்" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தான் 15 வயதாக இருக்கும்போது, அவருடைய நண்பரின் தோட்டத்தில் "குறுக்குவளர்ப்புரோஜா" செடிகளில் வித்தியாசமான பூக்கள் வளர்ந்திருப்பதை பார்த்து ஈர்க்கப்படுகிறார். ஒரு செடியில் வெவ்வேறு வண்ணரோஜாக்கள் வளர்கிறதே, ஒரு மரத்தில் பல வகை மாம்பழங்களை வளர்க்க முடியுமா என்பதை யோசிக்கின்றார்
பின் பல வருடங்களாக இதுபற்றிய நுட்பத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு, மாம்பழ மரக்கிளைகளை வெட்டியும், ஒவ்வொரு மரத்திலிருந்து பிரித்தெடுத்தும் வேலையை செய்ய துவங்குகின்றார். ஒவ்வொரு மாம்பழ மரத்தையும் வளர்த்து, மாம்பழங்களை சுவைத்துப்பார்க்கிறார். மரத்தை குறித்து ஆர்வமாக உள்ள இவர், முதன்முதலாக 1987-இல் 100 ஆண்டுகள் பழமையான மா-மரத்தில் இருந்து புதிய மரத்தை உருவாக்கும் முயற்சியை துவங்கினார். இந்த துவக்கம் தான் தற்போது 300 மாம்பழங்களை கொண்ட மரமாக உருவெடுத்துள்ளது. இதை "அல் முகுவார்" என்றும் அவர் அழைக்கிறார்.
இது குறித்து கான் கூறியிருப்பதாவது,
என்னுடைய சென்ற 300 வருடங்களாக மாம்பழ உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றோம்.எண்களின் முன்னோர்கள் ராஜ்வாடாவைச் சேர்ந்தவர்கள். கலப்பின வகை மாம்பழ மரங்களை அவர்கள் வளர்த்து வந்தனர். என் 17 வயதில் மாம்பழ மரத்தை பயிரிட துவங்கினேன். இதில் ஏழு வகை மாம்பழங்கள் இருந்தன, இவை ஒவ்வொன்றும் வேறு சுவையும், மணமும் கொண்டிருந்தன.
"பெற்றோரின் 2 குழந்தைகள் குணங்களில் வித்தியாசமாக இருப்பதை போல, ஒரு விதையிலிருந்து முளைக்கக்கூடிய மாம்பழங்களும் மாறுபட்டு இருக்கின்றன. அதேபோல் புதிய மா வகை மரங்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, பரிசோதனையும் செய்கிறேன் என்று கூறுகிறார்.
ஒவ்வொரு மாம்பழத்திற்கும் பெயர் சூட்டிய இவர் நரேந்திர மோடியின் பெயரை வைத்து "நமோ" என்று பெயர் சூட்டியுள்ளார்.பின் பிற மாம்பழங்களுக்கு நடிகை நர்கீஸ் தத், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர், முகல்-இ-அசாம், திரைப்பட பிரபல கதாபாத்திம் அனார்கலி உள்ளிட்ட பெயர்களையும் வைத்துள்ளார்.
கலிமுல்லா ஒரு குறிப்பிட்ட வகை கொய்யாவை வளர்க்கிறார். இதன் சிறப்பு என்னவெனில் இது பழுத்ததும் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் என்பதுதான். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout