ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்.. 'வேட்டையன்' படம் பார்த்த பின் நடிகையின் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,October 11 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால், இப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ’ஜெயிலர்’ வசூலை முந்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நேற்றைய முதல் நாளில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் பலர் திரையரங்குகளுக்கு வந்து ‘வேட்டையன்’ படத்தை பார்த்தனர். குறிப்பாக, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன், ‘வேட்டையன்’ படத்தை திரையரங்கில் பார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

அந்த பதிவில் ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர். இதுதான் என் வாழ்க்கையின் மறக்க முடியாத முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ராயன்’ ‘வேட்டையன்’ உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வரும் துஷாரா, தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'விடுதலை' 3ஆம் பாகம் உருவாகிறதா? வெற்றிமாறனின் மாஸ் திட்டம்..!

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து

அஜித்தின் வித்தியாசமான 2 கெட்டப்புகள்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படங்கள்..!

நடிகர் அஜித், தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

லெட்சுமி கடாட்சம் பெற என்ன செய்ய வேண்டும் : பாலாறு சுவாமிகள்

பிரபல ஆன்மீக ஜோதிடர் பாலாறு சுவாமிகள், ஆன்மீக கிளிட்ஸுக்கு அளித்த பேட்டியின் இரண்டாம் பாகத்தில்,

தமிழக முதல்வர் உறவினர் மறைவு.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறவினர் மறைவை அடுத்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'விடுதலை 2' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்.. ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவிப்பு..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம்