ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 12 லட்சத்தில் வீடு கட்டு கொடுத்த பிரபல தொழிலதிபர்!

  • IndiaGlitz, [Tuesday,May 10 2022]

கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பிரபல தொழிலதிபர் 12 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார் .

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று அழைக்கப்படுபவர் கமலாத்தாள். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இதனை அறிந்த மகேந்திரா குடும்பத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா அவருக்கு சொந்த வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.

கமலாத்தாள் விரும்பிய பகுதியில் இரண்டு சென்ட் நிலம் வாங்கிய ஆனந்த் மஹிந்திரா, கமலாத்தாள் பெயரிலேயே நிலத்தை பதிவு செய்தார். அந்த நிலத்தில் வீடு கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் அன்னையர் தினத்தில் கமலாத்தாள் பாட்டியிடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அன்னையர் தினத்தில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு பரிசாக அளிப்பதில் எங்கள் குழுமம் மிகவும் சந்தோசம் அடைகிறது என்றும், எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் அவருக்கு ஒரு சிறிய சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு இல்லை’ என தெரிவித்துள்ளார் .

மேலும் கமலாத்தாள் பாட்டியின் தேவைக்கேற்ப வீடு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீட்டில் சமையலறை, உணவு பரிமாறும் அறை, கழிப்பறை மற்றும் தங்கும் அறை ஆகிய வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கமலாத்தாள் கூறியபோது ’வீடு கட்டிக் கொடுத்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐய அவர்களுக்கு நன்றி என்றும், நான் எவ்வளவு காரணம் உயிரோடு இருக்கின்றோனோ, அவ்வளவு காலம் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.