ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி. இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணியோடு சேர்த்து 23 கிராட் தங்கத்தையும் உண்ணக் கொடுக்கிறார்கள். இப்படி கொடுக்கும் அந்த உணவிற்கு வெறும் ரூ.4 லட்சம் மட்டும்தான் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் பாம்பே போரோ எனும் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் ஓராண்டு நிறைவையொட்டி 23 கிராட் தங்கத்தோடு சேர்த்து பிரியாணி சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் உண்ணக்கூடிய தங்கத்தைப் பயன்படுத்தி இருப்பதோடு அலங்காரத்திற்கும் தங்கத்தை கொட்டி வைத்து இருக்கிறார்கள். இதனால் பார்ப்பதற்கே அந்தப் பிரியாணி தங்கச் சுருளைப்போல காட்சி அளிக்கிறது.
இந்தியர்களால் நடத்தப்படும் அந்த உணவகத்தில் இந்த பிரியாணியோடு சேர்த்து பாரம்பரிய இந்திய உணவுகளையும் வழங்குகின்றனர். அதிலும் குறிப்பாக காஷ்மீரின் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ் மற்றும் மலாய் சிக்கன் ஆகியவற்றையும் கொடுக்கின்றனர். 4 பேர் சாப்பிடக்கூடிய அளவில் இருக்கும் இந்த பிரியாணியின் விலை ரூ.4 லட்சம் என்பதுதான் மலைக்க வைக்கிறது. மேலும் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி என்ற பெருமையையும் இது சேர்த்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com