தினகரன் கட்சியுடன் கூட்டணி வைத்த ஒரே கட்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வலுவான கூட்டணியை அமைத்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் மூன்றாவது கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது
இந்த நிலையில் தினகரனின் அமமுகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் தனது கட்சியான அமமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார். அப்படியானால் அந்த மீதமுள்ள ஒரு தொகுதி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது
அந்த் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ என்று கூறப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு தினகரன் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது இக்கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments