சர்வதேச பிரபலத்தை கவர்ந்த கமல்ஹாசனின் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் இறங்க போவதாக அறிவிப்பு செய்ததும் முதலில் தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்தனர். பின்னர் தமிழகத்தை தாண்டி கேரள முதல்வர் மற்றும் டெல்லி முதல்வரை சந்தித்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். விரைவில் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கமல்ஹாசனின் கருத்து ஒன்று சர்வதேச பிரபலத்தை கவர்ந்துள்ளது. சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசனிடம், 'இதுதான் அரசியலில் குதிக்க சரியான நேரம் என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு 'இல்லை, இதுதான் அரசியலில் நுழைய மோசமான நேரம், அதனால் தான் நான் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளேன்' என்று கூறியுள்ளார்
கமல்ஹாசனின் இந்த பதிலை சர்வதேச அளவில் புகழ்பெற்ற செலிபிரிட்டி பியரி லூவிஸ் என்பவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து அதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். மாநிலம், தேசியம் கடந்து சர்வதேச அளவில் கமல்ஹாசனின் கருத்துக்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது என்பதையே இது காட்டுவதாக கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமிதம் கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com