தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி: இம்முறை சிக்கியது திருச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு நாட்களாகிய பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவது அனைவரையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சி நபரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout