விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த மேலும் ஒரு 'விக்ரம்' நடிகர்..!
- IndiaGlitz, [Thursday,April 13 2023]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் காஷ்மீர் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடிப்பு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் ’விக்ரம்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் நடித்த கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் ‘லியோ’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவி வருகிறது
இந்த செய்தியை இன்னும் உறுதி செய்யப்பட விட்டாலும் ’விக்ரம்’ படத்தில் நடித்த ஜாபர் சாதிக், ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இணைந்த புகைப்படத்தை பதிவு செய்து நன்றி என்று கூறியுள்ளார். மேலும் அந்த பதிவின் ஹேஷ்டேக்கில் ‘லியோ’ இருப்பதை அடுத்து அவர் இந்த படத்தில் இணைந்துள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு வெளியான ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you 😘 @Dir_Lokesh #Leo #Thalapathy @actorvijay Sir 🙏❤ pic.twitter.com/Crkop6oJdM
— jaffer Sadiq (@iamjafferSadiq) April 13, 2023