மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்.. பிக்பாஸ் இந்த சீசன் ஃபுல்லா விஜய் டிவி புரடொக்ட்ஸ் தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக இருந்த நிலையில் 6வது சீசன் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சீசன் 6ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜலட்சுமி, விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் விஜய் டிவி புரடொக்ட் அதிகம் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான அமுதவாணன் என்பவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் என்பது தெரிந்ததே.
ஆக மொத்தத்தில் இந்த சீசனில் பெரும்பாலும் விஜய் டிவி புரடொக்ட்ஸ்களாக இருப்பார்கள் என்று வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com