தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டு பாசிட்டிவ்வாக ஆரம்பித்துள்ளது: கொரோனா தொற்றால் பாதித்த தமிழ் ஹீரோவின் டுவிட்!
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருசில பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பிரபல ஹீரோ ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே மகேஷ்பாபு, சத்யராஜ், மீனா, த்ரிஷா, ஷெரின், பிரியதர்ஷன் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு தனக்கு பாசிட்டிவாக தொடங்கியுள்ளதாகவும் தனக்கான கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல் ஆகியவை இருப்பதாகவும் லேசான காய்ச்சல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2022
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 9, 2022
Starting wid a +IVE result..??
Guys ...
Yes im covid +ive...
Anyone who came in contact with me in the last 1 week please take care..
Horrific body pains and nose block,itchy throat n also mild fever..
Looking forward to bounce back soon??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments