close
Choose your channels

மோகன்லாலை அடுத்து 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்!

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்களை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைவதை அடுத்து ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களா என்ற ஆச்சரியம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு திரை உலகின் காமெடி நடிகராக பல படங்களில் நடித்த இவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’மரியாதை ராமன்னா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு ‘புஷ்பா’ படத்தில் அதிரடி வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ கார்த்தியின் ’ஜப்பான்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வரும் சுனில் ‘ஜெயிலர்’ பாடத்திலும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் திசையில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment