சின்னத்திரையில் இருந்து மேலும் ஒரு நாயகி: விருது பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கிறார்
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயினியாக வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் சின்னத்திரையில் ஜொலித்து கொண்டிருந்த பிரியா பவானிசங்கர் பெரிய திரையில் தற்போது பிசியான ஹீரோயினியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சின்னத்திரை நடிகை பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். அவர் 'தெய்வமகள்' சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து வந்த வாணி போஜன் என்பவர் தான். இவர் என்.எச்4' என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை லோகேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என் பெயர் மகிழ்வன்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும், ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இதுவரை மூன்று விருதுகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
லோகேஷ்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள 'என்.எச்.4' படத்தில் வாணிபோஜன் நடிப்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு எண்ட்ரி ஆகும் வாணிபோஜனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்க்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout