பப்ஜி சவாலில் தோற்ற 16 வயது மாணவன் தற்கொலை… பரிதாபச் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தமிழக அரசு உட்பட பல மாநிலங்கள் தடைவிதித்து இருக்கின்றன. இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடிய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் சக நண்பர்கள் போட்ட சவாலில் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளான். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு கடந்த செப்டம்பர் முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் செல்போனில் உள்ள விபிஎன் வசதியைப் பயன்படுத்தி செல்போனில் உள்ள லோகேஷை மாற்றி விளையாட முடியும். இதைப் பயன்படுத்தி சில இளைஞர்கள் இன்றும் பப்ஜி விளையாடி வருகின்றனர். இப்படித்தான் ஒசூர் பகுதியின் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ரவி என்ற 16 வயது சிறுவன் பப்ஜி கேம் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் சக நண்பர்களுடன் ஏற்பட்ட சவாலில் தோற்ற அவர் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

முதலில் இதை சாதாரணமாக கருதிய போலீசார் அடுத்த அடுத்த விசாரணையில் நண்பர்களுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே தந்தையை இழந்து இருந்த ரவிக்கு வாய் பேசமுடியாத தாய் மற்றும் ஒரு சகோதரர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தனது மகனின் இறப்பை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார் அந்த வாய்பேச முடியாத தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'ஆடுகளம்' நடிகர்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம்

'மாநாடு' டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

பட்ஜெட் தாக்கலை அடுத்து தங்கம் விலை குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021-2022 பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி இருந்தார்.

கார்த்தியின் 'சுல்தான்': ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

டி10 லீக் போட்டிகளில் ஒரு வரலாற்று சாதனை… ஒரு வீரரைப் பார்த்து மிரளும் ரசிகர்கள்!

அபுதாபியில் நடைபெற உள்ள 14  ஆவது ஐபிஎல் சீசன்  போட்டிகளுக்கு முன்னதாக அங்கு டி10 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.