தளபதி விஜய் மிகவும் வருத்தப்பட்டார்.. இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு: தயாரிப்பாளர் லலித்..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தளபதி விஜய் மிகவும் வருத்தப்படுவதாகவும் எனவே இந்த படத்தின் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு வரும் என்றும் ’லியோ’ படத்தின் தயாரிப்பாளர் லலித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடிய தயாரிப்பாளர் லலித், ‘லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தளபதி விஜய் மிகவும் வருத்தத்துடன் இருந்ததாகவும் தனது ரசிகர்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

எனவே ’லியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் விரைவில் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அக்டோபர் 15 முதல் ’லியோ’ படத்தின் முன்பதிவு ஆரம்பமாகும் என்று கூறிய அவர், ’லியோ’ படத்தின் ஒவ்வொரு நாளின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை ரெகுலராக கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் சுமார் 30,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் முதல் பாதியின் பின்னணி இசையை அனிருத் முடிந்து விட்டதாகவும் தற்போது இரண்டாவது பாதியின் பின்னணி இசை அமைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறிய லலித், ஒட்டுமொத்த பணியும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

More News

கமல், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'லியோ'? உறுதி செய்யப்பட்டுள்ளதா லோகேஷின் LCU?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' திரைப்படம்  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜின்

என்னோட முந்தைய 2 படத்தையும் பாக்காதீங்க.. இன்று வெளியாகும் படத்தின் இயக்குனர் வேண்டுகோள்..!

இன்று வெளியாகும் படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் என்னுடைய முந்தைய இரண்டு படத்தையும் பார்க்க வேண்டாம் என்றும் அப்போதுதான் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்றும் கூறி இருப்பது ஆச்சரியத்தை

என் மேல கை வச்சிட்டு நீ வெளியில போய் பாரு.. மிரட்டும் கேப்டன் விஜய்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும்

லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி சொன்ன சின்மயி.. காரணம் என்ன?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை

அதுக்கு மேல் உண்மைய சொல்லணும்னா, லியோ தான் உயிரோடு வந்து சொல்லணும்: 'லியோ' டிரைலர்..!

 தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது