மீண்டும் உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்: புதிய சங்கத்தின் பெயர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு ஏற்கனவே நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என பிரிந்தது என்பதும் இதில் பாரதிராஜா தலைவராக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முரளி ராமசாமி அணி வெற்றி பெற்றது என்பதும் இன்று கலைவாணர் அரங்கில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த டி ராஜேந்தர் அணி புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவ முயற்சித்துள்ளனர். ’தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’ என்ற பெயரில் டி ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு உருவாக இருப்பதாகவும் இந்த புதிய அமைப்பு வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ்த்திரையுலகில் இந்த சங்கத்துடன் சேர்ந்து மொத்தம் மூன்று தயாரிப்பாளர் சங்கங்கள் இருக்கின்றன என்பதும், ஒரு தயாரிப்பாளருக்கு பிரச்சனை என்றால் அவர் எந்த சங்கத்தை அணுகுவார் என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.