பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய மேலும் ஒரு படம்!

  • IndiaGlitz, [Sunday,January 09 2022]

பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவேண்டிய அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் தள்ளிப் போனதை அடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் ஒரு சிலவற்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய ’வலிமை’ தள்ளிப் போனதால் ’கொம்பு வச்ச சிங்கம்’ ’நாய் சேகர்’ ’என்ன சொல்ல போகிறாய்’ ’கார்பன்’ ’ஐஸ்வர்யா முருகன்’ ’மருத’, ‘பாசகார பய’, ‘ஏஜிபி’ ஆகிய எட்டு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இந்த படங்களின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவற்றில் ’ஐஸ்வர்யா முருகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸாவதற்கு பதிலாக ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேணிகுண்டா, கருப்பன் ஆகிய படங்களை இயக்கிய ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை, தேவேந்திரன், ஹரிஷ், சாய் சங்கீத், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைத்துள்ளார்.