சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் சென்னையில் ஏற்கனவே ஒரு சில காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி செய்து கொண்டிருந்த குருமூர்த்தி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரணமடைந்த காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தி அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனாவால் பலியான உதவி ஆய்வாளர் குருமூர்த்தி குறித்து ஐபிஎஸ் அதிகாரி நரேஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். காவல்துறை மீண்டும் ஒரு அர்ப்பணிப்பு உள்ள குருமூர்த்தி என்ற ஹீரோவை இழந்து விட்டது. அவரது சேவைக்கு எனது சல்யூட் என்று தெரிவித்துள்ளார்
ஏற்கனவே மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் பாலமுரளி, சூளைமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
We lost another hero SI Gurumurthy. He sacrificed his life at altar of duty fighting Corona. We salute his supreme sacrifice. pic.twitter.com/UQRygNhPZa
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) July 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments