பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 10 முதல் 17 வரை சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தங்களை தாங்களே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத்துறையை அணுகவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.

இதனை அடுத்து சென்னை பீனிக்ஸ் மாலுக்கு அந்த ஒரு வாரத்தில் சென்று வந்த 3,300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் சமீபத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை பீனிக்ஸ் மால் சென்று வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செஞ்சி பகுதியை சேர்ந்த இவர் கடந்த மார்ச் மாதம் பீனிக்ஸ் மால் சென்று வந்ததாகவும், இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து பீனிக்ஸ் மால் சென்று வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வீடு புகுந்து சாத்திருவேன்: ஜாக்குலினை மிரட்டிய பக்கத்து வீட்டு நபர்

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் ஜாக்லின். இவர் தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார்

உலகப் பொருளாதாரம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரடியைச் சந்திக்கும்!!! சர்வதேச நிதி ஆணையம்!!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகப்பொருளாதாரம் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது

கொரில்லாவுக்கு கொரோனாவா??? எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா நோய்த்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கொரோனா; பலியானவர்களை உலக நாடுகள் இப்படித்தான் அடக்கம் செய்கிறது!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதைக் குறித்து உலகச்சுகாதார நிறுவனம் சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தலைமைச்செயலர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை மொத்தம் 911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்