தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மூன்றாவதாக ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ள தகவலை சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் என்ற நகரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த 21 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருடைய ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
 

More News

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

பிறந்து 6 நாட்களேயான பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து சிசுக்கொலை!!! 

21 ஆம் நூற்றாண்டிலும் சிலரிடம் பெண் பிள்ளை என்றால் தானாகவே ஒவ்வாமை வந்து விடுகிறது.

ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 14 பாடல்கள்: மார்ச் 20ல் ரிலீஸ்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது பிசியான இசைப்பணியிலும் '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து அந்த படத்திற்கு இசையமைத்தும் வருகிறார்.

கொரோனாவால் திணறும் ஐரோப்பிய நாடுகள்!!! 

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

ஆபாச இணையதளத்தில் மீராமிதுன் புகைப்படம்: என்ன செய்கிறது சைபர் க்ரைம்?

தனது புகைப்படம் மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்காதது ஏன்