நாடக காதல் குறித்து இன்னொரு திரைப்படம்: ஜிவி பிரகாஷ் பட இயக்குனர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஜி மோகன் இயக்கிய ’திரௌபதி’ என்ற திரைப்படம் நாடக காதல் குறித்த திரைப்படம் என்பதும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் நாடக காதல் குறித்து நடுநிலையோடு ஒரு சினிமா எடுக்கப்படும் என்றும் இயக்குனர் சண்முகம் முத்துசாமி என்பவர் அறிவித்துள்ளார். இயக்குனர் சண்முகம் முத்துசாமி ஏற்கனவே ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’அடங்காதே’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இதுகுறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது: வேற வழியில்லை... வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்” என்று கூறியதோடு தனது நாடகக்காதல் குறித்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆணவக்கொலைகள் மற்றும் நாடக காதல் குறித்த திரைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னொரு நாடக காதல் திரைப்படமா? என்ற ஆச்சரியத்தில் திரையுலகம் உள்ளது. இதேபோல் வேறு சிலரும் நாடக காதல் மற்றும் ஆணவகொலை குறித்த திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
My Next as ✍️....
— ?????????????????? ?????????????????? (@shan_dir) March 2, 2020
Details soon ????@itisprashanth @LMKMovieManiac @rameshlaus @sri50 @pudiharicharan @kayaldevaraj @esakkimuthuk @meenakshicinema @cinemapayyan @sathishmsk @onlynikil pic.twitter.com/QW3Of1wvJY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments