நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இசையமைக்கும் இளையராஜா குடும்பத்து இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல அவரது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருமே இசையமைப்பாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் என்பதும் , கங்கை அமரன் மகன் பிரேம்ஜியும் இசை அமைப்பாளர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் பாக்யா என்பவர் இயக்கியுள்ள ’பட்டாம்பூச்சியின் கல்லறை’ என்ற திரைப்படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ‘மாயநதி’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த நிலையில் மீண்டும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது. பவதாரிணி ஒரு பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.
ஷீலா ராஜ்குமார் என்பவர் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’மண்டேலா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபி புரோடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவமான படமாக ’பட்டாம்பூச்சியின் கல்லறை’ அமைந்துள்ளதாகவும், இந்த படத்தில்தான் இளையராஜாவின் மகள் பவதாரணி சிறப்பாக இசையமைத்துள்ளார் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to reveal @RoobyFilms ‘s Production No #5 Title & First look #pattampoochiyinkallarai ??@Hasheer75 #Bhagya @DirectorMysskin @sheelaActress@bhavatharini @MasterSridhar @Lizzieantony @Viveka_Lyrics @SakthipriyanCi1 @pro_barani @thiruupdates pic.twitter.com/Ok4hDMtLim
— Mysskin (@DirectorMysskin) September 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments