நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இசையமைக்கும் இளையராஜா குடும்பத்து இசையமைப்பாளர்

 இசைஞானி இளையராஜா உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல அவரது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருமே இசையமைப்பாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் என்பதும் , கங்கை அமரன் மகன் பிரேம்ஜியும் இசை அமைப்பாளர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் பாக்யா என்பவர் இயக்கியுள்ள ’பட்டாம்பூச்சியின் கல்லறை’ என்ற திரைப்படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ‘மாயநதி’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த நிலையில் மீண்டும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது. பவதாரிணி ஒரு பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.

ஷீலா ராஜ்குமார் என்பவர் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’மண்டேலா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபி புரோடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவமான படமாக  ’பட்டாம்பூச்சியின் கல்லறை’ அமைந்துள்ளதாகவும், இந்த படத்தில்தான் இளையராஜாவின் மகள் பவதாரணி சிறப்பாக இசையமைத்துள்ளார் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'பொன்னியின் செல்வன்' வெளியாகும் முன்பே விமர்சனமா? சுஹாசினி கேள்விக்கு நெட்டிசன்கள் பதில்!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இன்றே டுவிட்டரில் ஒருவர் விமர்சனம் எழுதியதற்கு, உங்களால் மட்டும் படம் வெளியாகும்

வெற்றிமாறனின் 'விடுதலை' ரிலீஸ் தேதி இதுவா?

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடித்த திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில்

கமல்ஹாசனுக்கு பாடம் சொல்லி கொடுத்த பிரபலம்.. 'இந்தியன் 2' படத்தின் சூப்பர் அப்டேட்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மனைவி மகாலட்சுமிக்கு மாலை அணிவித்த ரவீந்தர்.. என்ன விசேஷம்?

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் தற்போது தனது மனைவிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள

சிரஞ்சீவி - நயன்தாராவின் 'காட்ஃபாதர்': மாஸ் டிரைலர் ரிலீஸ்

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.