close
Choose your channels

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் திடீரென இணைந்த இன்னொரு படம்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

Monday, October 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாளில் சிவகார்த்திகேயனின் 'அமரன்’, கவின் நடித்த ’பிளடி பெக்கர்’, மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதே நாளில் ஓடிடியிலும் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தில் ஓடிடியில் ஏற்கனவே விக்ரம் நடித்த ’தங்கலான்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’லப்பர் பந்து ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போது அந்த பட்டியலில் பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்ட்ரோவின் என்ற வெளிநாட்டு சேனலிலும் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே தீபாவளி திருநாளில் திரையரங்குகளில் ’அமரன்’, ’பிளடி பெக்கர்’, ’பிரதர்’ ஆகிய படங்களும், ஓடிடியில் ’தங்கலான்’ ’லப்பர் பந்து' ஆகிய படங்களோடு தற்போது ’அந்தகன் ’படமும் இணைந்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்களுக்கு குஷி ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment