தீபாவளி ரிலீஸ் பட்டியலில் திடீரென இணைந்த இன்னொரு படம்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாளில் சிவகார்த்திகேயனின் 'அமரன்’, கவின் நடித்த ’பிளடி பெக்கர்’, மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதே நாளில் ஓடிடியிலும் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தில் ஓடிடியில் ஏற்கனவே விக்ரம் நடித்த ’தங்கலான்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’லப்பர் பந்து ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. தற்போது அந்த பட்டியலில் பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்ட்ரோவின் என்ற வெளிநாட்டு சேனலிலும் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே தீபாவளி திருநாளில் திரையரங்குகளில் ’அமரன்’, ’பிளடி பெக்கர்’, ’பிரதர்’ ஆகிய படங்களும், ஓடிடியில் ’தங்கலான்’ ’லப்பர் பந்து' ஆகிய படங்களோடு தற்போது ’அந்தகன் ’படமும் இணைந்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்களுக்கு குஷி ஏற்பட்டுள்ளது.

More News

'லப்பர் பந்து' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகர் தான் மாப்பிள்ளை.. க்யூட் புகைப்படங்கள்..!

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'லப்பர் பந்து" என்ற படத்தில் நடித்த நடிகை, சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும்

விஜய் சொன்ன குட்டிக்கதையில் அந்த சின்னப்பையன் யார் தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று நடந்த போது, அதில் பேசிய விஜய், "கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்" என்று சிறுவயதிலேயே மன்னராக முடிசூடி போருக்கு புறப்பட்ட பாண்டிய மன்னனின் ஒரு கதையை கூறினார்.

நள்ளிரவில் படப்பிடிப்பின்போது வந்த குரல்.. நயன்தாராவின் க்யூட் ரியாக்சன்.. வைரல் வீடியோ..!

நடிகை நயன்தாரா நள்ளிரவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது திடீரென தனது ரசிகர் இடம் இருந்து வந்த குரலை நோக்கி பார்த்த அவர் 'தூங்கு' என்று ஸ்வீட்டாக கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உன்னால மட்டும் தான் முடியும்.. முக்கிய பணியை பாடலாசிரியருக்கு கொடுத்த விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடிகர் விஜய் நேற்று பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில், இந்த மாநாடு குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன

விக்ரமின் 'வீரதீர சூரன்' பிசினஸ் ஸ்டார்ட்ஸ்.. தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?

விக்ரம் நடிக்கும் "வீர தீர சூரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பிஸினஸ் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.