ஆகஸ்ட் ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு பிரபலத்தின் படம்.. த்ரிலுக்கு கேரண்டி..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 8 பிரபலங்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பிரபலத்தின் படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த ’தங்கலான்’, கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகுதாத்தா’ ஆகிய படங்கள் சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’காதலிக்க நேரமில்லை’ கவின் நடிப்பில் நெல்சன் தயாரித்த ’பிளடி பெக்கர்’ அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான ’வணங்கான்’ ஆகிய படங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் விஜய் ஆண்டனி நடித்த ’ஹிட்லர்’ பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ தம்பி ராமையா நடித்த ’ராஜாக்களி’ ஆகிய படங்களும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அருள்நிதி நடிப்பில் உருவான ’டிமான்டி காலனி ’ திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த படத்திலும் முதல் பாகம் போலவே த்ரில் கேரண்டி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் குமரேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இன்னும் 100 நாள் தான்.. 'கங்குவா' படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ வைரல்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்திரஜா ரோபோ சங்கர் கர்ப்பமா? மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சொன்ன குட் நியூஸ்..!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரஜா  ரோபோ சங்கர் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

திடீரென சென்னை திரும்பினார் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வாரா?

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவர் திடீர் என சென்னை திரும்பி உள்ளார்.

மீன ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான மீன ராசி பலனை கணித்துள்ளார்.

கும்ப ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான கும்ப ராசி பலனை கணித்துள்ளார்.