ஆகஸ்ட் ரிலீஸ் பட்டியலில் இணைந்த இன்னொரு பிரபலத்தின் படம்.. த்ரிலுக்கு கேரண்டி..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 8 பிரபலங்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பிரபலத்தின் படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த ’தங்கலான்’, கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகுதாத்தா’ ஆகிய படங்கள் சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’காதலிக்க நேரமில்லை’ கவின் நடிப்பில் நெல்சன் தயாரித்த ’பிளடி பெக்கர்’ அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான ’வணங்கான்’ ஆகிய படங்களும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் விஜய் ஆண்டனி நடித்த ’ஹிட்லர்’ பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ தம்பி ராமையா நடித்த ’ராஜாக்களி’ ஆகிய படங்களும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அருள்நிதி நடிப்பில் உருவான ’டிமான்டி காலனி ’ திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த படத்திலும் முதல் பாகம் போலவே த்ரில் கேரண்டி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் குமரேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.