'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு 'கைதி' நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட விஜய் லண்டன் சென்றிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி உள்பட மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார் என்ற செய்தியைப் பார்த்தோம். தற்போது ’கைதி’ படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தளபதி 64 படத்தில் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
’கைதி’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிய 5 இளைஞர்களில் ஒருவராகிய லல்லு என்பவர் தற்போது தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது ’இந்த வருடம் ஆரம்பமே எனக்கு பாசிட்டிவாக தொடங்கியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தில் நானும் இணைந்து உள்ளேன். இதற்கு வெறும் நன்றி என்ற ஒரு வார்த்தை கூறுவது சரியாக இருக்காது. தளபதி அவர்களுடன் இணைந்து நான் இரண்டாவது முறையாக நடிக்கிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது
Starting the year with positivity. Coming to you from the sets of a @Dir_Lokesh anna's film ❤️. Just thanks would never be enough for you na. Second film with my #thalapathy @actorvijay anna still feels like a dream ?? #Kaithi boys to #thalapathy64 boys! #HappyNewYear2020
— Lallu (@lalluTweets) December 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments