'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு 'கைதி' நடிகர்

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட விஜய் லண்டன் சென்றிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி உள்பட மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார் என்ற செய்தியைப் பார்த்தோம். தற்போது ’கைதி’ படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தளபதி 64 படத்தில் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

’கைதி’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிய 5 இளைஞர்களில் ஒருவராகிய லல்லு என்பவர் தற்போது தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது ’இந்த வருடம் ஆரம்பமே எனக்கு பாசிட்டிவாக தொடங்கியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தில் நானும் இணைந்து உள்ளேன். இதற்கு வெறும் நன்றி என்ற ஒரு வார்த்தை கூறுவது சரியாக இருக்காது. தளபதி அவர்களுடன் இணைந்து நான் இரண்டாவது முறையாக நடிக்கிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

More News

மது அருந்திய கல்லூரி மாணவிகள்: வீடியோ வைரலானதால் தற்கொலை முயற்சி!

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி மாணவிகள் நால்வர் சீருடை அணிந்தபடி மது அருந்திய வீடியோ வைரல் ஆனதை அடுத்து அந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரபல நடிகரின் படத்திலிருந்து கௌதம் மேனன் விலகலா? பரபரப்பு தகவல் 

பிரபல இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் அடுத்த படமான 'எப்.ஐ.ஆர்' என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

கமல்ஹாசன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

அறிமுக நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் முதல் மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வரை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் டீஸர், டிரெய்லர் ஆகியவை வெளியிடுவது வழக்கமான ஒன்றே

புதிய அழைப்பிதழ்: வைரமுத்துவின் டாக்டர் பட்டம் என்ன ஆச்சு?

பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாகவும் இந்த பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் வழங்க இருப்பதாகவும்

செயற்கையாக ஒரு சூரியனையே உருவாக்கிக் கொண்டிருக்கும் சீனா..!

''HL-2M Tokomak எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கை சூரியனைத் தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும்" என அறிவித்திருந்தது சீனாவின் National Nuclear Corporation.