கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள முகமது சித்திக் என்ற 76 வயது பெரியவர் முதன்முதலாக கொரோனாவுக்கு பலியான நிலையில் அதனை அடுத்து இந்தியாவில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பதால் கொரோனாவால் இந்தியாவில் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் 63 வயதில் பெரியவர் ஒருவர் கொரோனாவால் தாக்கப்பட்டு கடந்த 15 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் பலியாகியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 இந்தியர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் இவர்கள் அனைவரும் கொரோனாவால் மட்டுமன்றி ஏற்கனவே சர்க்கரை நோய் உள்பட ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனிமை அறையில் மணிரத்னம் மகன்: வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை

ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நீக்கியது ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிக்க கோரியும்

ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே

சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தெருவில் நடந்த திருமணம்

இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல்

இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதுமா?

கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை