குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதால் சம்பவ தினத்தன்றே 11 பேர் பரிதாபமாக தீயில் கருகி மரணம் அடைந்தனர். பின்னர் நேற்று முன் தினம் ஒருவரும், நேற்று இருவரும் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது
இந்த நிலையில் 70% தீக்காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த சக்திகலா என்பவர் குரங்கணி தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் சற்றுமுன் மரணம் அடைந்தார். மேலும் இன்னும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments