'மீ டூ' விஷயத்தில் தமிழ் சினிமாவின் மெளனம் ஏன்? பிரபல நடிகர் ஆதங்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து இன்னும் திரையுலகின் பிரபலங்கள் குரல் கொடுக்காமல் உள்ளனர். அப்படியே குரல் கொடுத்தாலும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பதில் கூற வேண்டும் என்று நழுவும் வகையில் பேசி வருகின்றனர். நடிகைகள் சமந்தா, வரலட்சுமி உள்பட ஒருசிலர் மட்டுமே சின்மயிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'மீடூ விஷயத்தில் தமிழ் சினிமா மேலும் ஒருநாள் மெளனத்தில் உள்ளது. 'கடலில் மீன் ஒண்ணு அழுதா கரைக்கு செய்தி வந்து சேருமா" என்று கூறியுள்ள சித்தார்த், ஒருவேளை இன்னும் சில பெயர்கள் வெளிவந்தால் மட்டுமே தமிழ் சினிமா குரல் கொடுக்குமா? என்பதை பார்ப்போம்' என்று கூறியுள்ளார்.
பணிபுரியும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிஸ்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சித்தார்த் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com